மாநில அரசு, மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான கடலோர மண்டல மேலாண்மைக் குழுமங்களை அனைத்து 14 கடலோர மாவட்டங்களிலும் அமைந்துள்ளது. இக்குழுமங்கள் குறிப்பிட்ட கால இடைவெயிகளில் கூடி கடற்கரை ஒழுங்குமுறை அறிவிக்கைகள் குறித்த பொருண்மைகள் மீது முடிவுகள் மேற்கொள்கின்றன.